Friday, June 2, 2017

Alas Kavikko Abdul Rahman is no more.....Retired Tamil Professor, Islamia College, Vaniyambadi

Otn Fri, Jun 2, 2017 at 6:51 AM, Muduvai Hidayath
wrote:
கவிக்கோ அப்துல் ரஹ்மான் வஃபாத்து : ஈமான் அமைப்பு இரங்கல்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று 02.06.2017 வெள்ளிக்கிழமை அதிகாலை வஃபாத்தானார். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரது மறைவுக்கு துபாய் ஈமான் அமைப்பு இரங்கல் தெரிவிக்கிறது. 
மேலும் மறைந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களது ஹக்கில் அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஈமான் அமைப்பு நடத்திய சமுதாய மேம்பாட்டு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 


சென்னை: கவிக்கோ அப்துல் ரகுமான்(80) உடல் நலக்குறைவு காரணமாக இன்று(ஜூன் 2) அதிகாலை காலமானார்.
சாகித்ய அகாடமி விருது வென்ற ‛கவிக்கோ' அப்துல் ரகுமான், மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். சென்னை பனையூர் வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிர் பிறந்தது.

வாழ்க்கை குறிப்பு:

'கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். 

சாகித்ய அகாடமி:

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், 1999ல் 'ஆலாபனை' கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார். 

--
முதுவை ஹிதாயத்

1 comment:

  1. very informative post for me as I am always looking for new content that can help me and my knowledge grow better.

    ReplyDelete