Sunday, February 3, 2019

Maulana Hafiz Md. Yaqoob sahib is no more


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 

மத்ரஸா காஷிஃபுல் ஹுதாவின் முதல்வரும்

தாருல் உலூம் தேவ்பந்தின் சூரா உறுப்பினரும் 

தமிழ்நாடு அமீரே ஷரீஅத்துமான 

கண்ணியம் நிறைந்த ஆலிம் 

ஆயிரக்கணக்கான ஆலிம் களின் ஆசிரியத்தந்தை

 ஆன்மீக குரு 

சிஷ்தியா தரீகா வின் கலீஃபா 

மௌலானா மௌலவி ஹாஃபிழ் முஹம்மது யஃகூப் காஸிமி 

நவ்வரல்லாஹு மர்கதஹு
அவர்களின் வாழ்க்கை சுருக்கம் 

*1934 ல் மேல்விஷாரத்தில் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் மர்யம் பீவி* அவர்களுக்கு *இரண்டாவது மகனாக* பிறந்தார்கள்  ஆரம்ப கல்வி மேல் விஷாரத்தில் பயின்று அன்றைய sslc... puc படிப்பில் *மாவட்ட முதல் மாணவராக* தேர்ச்சிபெற்றார்கள் 

*முன்ஷி அல்லா தத்தா அல்லா வாலா இறை நேசர் (ரஹ்)* அவர்கள்  விஷாரத்திற்கு வந்த போது  ஹலரத் அவர்கள் உடனிருந்தார்கள் 

தான் உண்ட உணவின் மீதம் ஹலரத் திற்கு 
பரக்கத்தாக வழங்குவார்கள் 

தன்னுடன் சென்னை வரை அழைத்து வந்தார்கள் 

டெல்லி க்கு வரச் சொன்னார்கள்  

4 மாதம் ஜமாத்தில் சென்றார்கள் *முழுதமிழகத்தில்
3சில்லா முடித்தவர்களில் நானும்  ஒருவன்*என்று  ஹலரத் அவர்களே கூறுவார்கள் *ஷபீலுர்ரஷாத் நய்யர் ரப்பானி* அவர்களுடன் ஜமாஅத்தில் சென்றார்கள் 
*மர்கஸ் நிஜாமுதீனில்* இருந்து *மௌலானா ஹுஸைன் அஹ்மத் மதனீ  (ரஹ்)* அவர்களை கான தேவ்பந்த் சென்றார்கள் 
வெளியூர் சென்று இருந்ததால் அவர்கள் மகனார் *மௌலானா அஸ்அத் மதனீ* இடம் முகவரி தந்து கடிதம் போட சொன்னார்கள் 

கடிதம் வந்த பின்  பார்க்க சென்றார்கள் 


ஆலிம் கல்வியை *விஷாரத்தில்  ஹிதாயத் நஹூ* வரை ஓதி *பாகியாத்தில் 5 ஜும்ரா* வரை ஓதி
*தேவ்பந்த் சர்வ கலா சாலையில் 3 வருடம்* கல்வி பயின்றார்கள் 

கல்வி பயின்ற பின் *சைகுல் ஹதீஸ் ஜக்கரியா(ரஹ்) அவர்களின் *காதிமாக* 
கடிதம் எழுதும் *காதிபாக* 2 வருடம் இருந்தார்கள்  

தேவ்பந்த் க்கு ஓதவரும்போது மதனீ ரஹ் வஃபாத் ஆனார்கள் 

பின்பு *தானா பவனில்* 2 வருடம்  அதன்பின் *பெங்களூர் ஷபீலுர்ரஷாத் மத்ரஸா வில்* 6 வருடம் *சேலம் மத்ரஸாவில்10 வருடம்* *பாக்கியாத்தில்* 12 வருடம் *காயங்குளத்தில் ஒன்னரை வருடம்* அதன்பின் *1984 முதல் மத்ரஸா காஷிஃபுல் ஹுதாவின் முதல்வராக* இருந்து இன்று காலை அல்லாஹ் வின் அழைப்பை ஏற்று *தாருல் ஃபனா அழியும் உலகை விட்டு தாருல் பகா அழியா உலகின் பக்கம்* சென்றார்கள் 

அன்னாரின் மறு உலகப் பயணம் இறை பொருத்தம் பெற்ற ஸாலிஹீன்கள் ஷுஹதாக்கள் கூட்டத்தில் ஆக்கி அருள துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

ஹலரத் அவர்களின் மாணவர்கள்

No comments:

Post a Comment